உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல்!!

0
123

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, எங்கள் அண்ணா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவட் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட மொழிகளில் நடித்துள்ளார். 1984ல் தமிழில் ஒரே ஆண்டில் 18 படங்களை வெளியிட்ட நடிகர் என்ற வரலாற்றை படைத்தார். தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கி தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சிக்குத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் சின்ன வயதில் உதவி செய்து அப்பாவிட்ட அடிவாங்கியதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

விஜயகாந்த்திற்கு 16 வயது இருக்கும்போது, அவருடைய அப்பா அவருக்கு கழுத்தில் ஒரு தங்க செயினை அணிவித்திருந்தாராம்.

அப்போது, விஜயகாந்திற்கு தெரிந்த ஒரு ஏழை குடும்பத்தின் மகன் படிப்பு கட்டணத்திற்கு பணம் இல்லாமல் இருந்தனர். இதைப் பார்த்த விஜயகாந்த் உடனே தான் கழுத்தில் இருந்த செயினை எடுத்து, அந்த ஏழை குடும்பத்தினரிடம் கொடுத்து இந்த செயினை அடமானம் வைத்து படிப்பு செலவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறாராம்.

வீட்டிற்கு வந்த விஜயகாந்த் கழுத்தில் செயின் இல்லாததைப் பார்த்த அவரது அப்பா செயின் எங்கே என்று கேட்க, அதற்கு விஜயகாந்த் நடந்ததை சொல்லாமல் அமைதியாக இருந்தாராம். உடனே அவருடைய அப்பா, விஜயகாந்த்தை போட்டு, அடி அடின்னு அடித்து துவைத்துவிட்டாராம். அப்போது வேறு வழியில்லாமல் விஜயகாந்த் நடந்த உண்மையை கூறியுள்ளார். அப்போது, அவருடைய அப்பா என் நான் சம்பாரித்து வாங்கினது… உனக்கு யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீ சம்பாரித்து கொடு என்று கத்தி கூச்சல் போட்டுள்ளார். அதிலிருந்து விஜயகாந்த் அவர் சம்பாதித்த பணத்தில் மட்டும்தான் மற்றவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். அப்பா திட்டியதிலிருந்து ஒரு தங்கம் கூட அணியாமல், உழைத்து ஒரு செயின் வாங்கி அவர் கழுத்தில் போட்டுக் கொண்டார். அந்த செயினை திருமணமான பின் பிரேமலதா கழுத்தில் போட்டுள்ளாராம்.