தன்னுடைய 100 ஆவது படமான ” கேப்டன் பிரபாகரன் “திரைப்படத்தின் மூலம் விஜயகாந்தாக இல்லாமல் கேப்டனாக நம் அனைவருடைய மனதிலும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மற்றும் அரசியல்வாதியான உன்னத மனிதர் என்று மக்களால் போற்றப்படக்கூடிய விஜயகாந்த் அவர்கள்.
இப்படிப்பட்ட அவர் தான் நடித்த 160 படங்களில் பாதி படங்களுக்கு எந்த விதமான பணமும் வராமல் இலவசமாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அனைவருக்கும் உதவுவதில் மாமனிதராக விளங்கியவர் விஜயகாந்த் என்றால் யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட விஜயகாந்த் அவர்கள் நடிகை மீனாவின் உடைய உயிரையும் மானத்தையும் காப்பாற்றி இருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் சிவா அவர்கள்.
பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் சிவா அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
நட்சத்திர கலைவிழாவை முன்னின்று நடத்தியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். இவர் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் கேப்டனாகவே திகழ்ந்தார் என்று தெரிவித்தார்.
ஒரு சமயத்தில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பொழுது திடீரென 1000 க்கும் மேற்பட்டோர் கொண்ட கூட்டம் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. விஜயகாந்த், சரத்குமார் மற்றும் நெப்போலியன் ஆகியோர் நடிகைகள் உடைய லக்கேஜ்களை பேருந்துகளில் வெற்றி கொண்டிருக்கும் பொழுது நடிகை மீனாவிடம் வாகனத்தில் வந்த ஒருவன் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறான்.
இதனை பார்க்க விஜயகாந்த் அவர்கள், ஓடிச்சென்று அவனுடைய ஹெல்மெட்டை கழற்றி அவனுடைய தலையில் வேகமாக தாக்கி இருக்கிறார். இதனால் அவனக்கு ரத்தம் கொட்டவே, அங்கிருந்த கூட்டம் பயத்தில் கலைந்து விட்டது என்றும் இயக்குனர் சிவா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
அதன்பின் மீனாவை அழைத்துக் கொண்டு அனைவரும் சிங்கப்பூருக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது தன்னுடன் நடிப்பவர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் அவர் காட்டக்கூடிய அக்கறை மற்றும் அன்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.