Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

#image_title

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சென்னை கோயம்பேட்டில் இன்று காலை ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசியனார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர்..,

ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா நடைபெறும், தேமுதிக ஜாதி, மதம் என பாகுபாடு பார்க்காத ஒரு கட்சி என்பது அனைவர்க்கும் தெரியும்.

தேமுதிக என்றென்றும் இஸ்லாமியர்களுக்கு தோழனாக, சகோதரன், சகோதரியாக இருக்கும்.

என் கணவர், உங்கள் தலைவர் விஜயகாந்த் மீண்டும் பழைய கம்பீரத்துடன் எழுவார், அனைத்து விழாக்களிலும் பங்கேற்பார். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், அவர் மீண்டும் எழுந்து வர பிரார்தனை செய்தாலே போதும்.

#image_title

கடந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பில் இஸ்லாமிய நண்பர்கள் பலரை வேட்பாளர்களாக நிறுத்தினோம். இதனை தெரிந்த பலர் மாற்று கட்சியிலிருந்து, தேமுதிகாவில் சேர்ந்தார்கள்.

இடையில் ஒரு சிலர் துரோகங்களும் செய்து, முதுகில் குற்றினார்கள், பல இன்னல்களையும் சந்தித்தோம். ஆனால் இதுவரை ஒரு இஸ்லாமியர் கூட எங்கள் கட்சியில் இருந்து வெளியேறவில்லை.

கட்சிக்கு ஒரு கெட்ட பேரை கூட அவர்கள் தரவில்லை என்பது மிகவும் பெருமையாக உள்ளது என்பதை பதிவு செய்கிறேன்.

வெற்றியும் தோல்வியும் காணாத மனிதர்களே கிடையாது, வெற்றி கண்டால் கர்வம் கொள்ளக்கூடாது, தோல்வி கண்டால் சோர்ந்து விடக்கூடாது.

எதை சந்தித்தாலும் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்த முயற்சியில் தான் இப்பொழுது நாங்கள் உள்ளோம். விரைவில் தேமுதிக வெற்றி பெரும், மக்களுக்காக பணியாற்றும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.

இன்றும் மக்களின் நாயகன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள போகிறார், அதை பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவரும்.

மக்களுக்காக சேவை செய்வது தான் என் கணவரின் லட்சியம். அதற்காகவே விரைவில் தேமுதிக வெற்றி பெரும், மக்களுக்காக பணியாற்றும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறே மேடையில் பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.

Exit mobile version