அனைவரும் நலமுடன் வாழவேண்டும்! விஜயகாந்த் வெளியிட்ட செய்தி!

0
166

உலகத்தை அச்சுறுத்தி வரும் நோய் தொற்றில் இருந்து விடுபட்டு அனைவரும் நலமாக அன்பு செழித்தோங்கி சமாதானம் நிலைத்து நிற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் ஏழ்மையான நிலையை அறிந்து கொள்ளவும், பசியின் கொடுமையை எல்லோரும் தெரிந்து கொள்ளவும், உடல் நலத்தை பாதுகாத்து மனிதர்களை மேம்படுத்துவதற்காக தான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்பு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே ஏழை மக்களின் மீது அன்பு காட்டி அவர்களுக்கு உணவளித்து உடை போன்றவற்றை கொடுத்து, தானதர்மங்கள் செய்து முப்பது தினங்கள் புனித நோன்பினை முடிவுக்கு கொண்டுவந்து ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில் அன்பு செழித்தோங்கி அறம் மலர்ந்து சமாதானம் தலை தூக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு மனித இனத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நோய் தொற்றை செயலிழக்க செய்து உலகின் அனைத்து மக்களும் இன்பத்துடன் வாழ்ந்திட இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு, இஸ்லாமிய பெருமக்கள் எல்லோருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.