கல்லுக்குள் ஈரம் படத்திற்காக கன்னத்தில் அடி வாங்கிய விஜயசாந்தி!! பாரதிராஜா இவ்வளவு கண்டிப்பானவரா!!

0
141
Vijayashanthi was slapped on the cheek for the film Kallukkhun Eram!! Bharathiraja is so strict!!

முதன் முதலில் ஜே சாந்தி அவர்கள் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்திற்காக அவர் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார் என்று சொன்னால் அப்படியா என கேட்கத் தோன்றுகிறது அல்லவா!!

நடிகை விஜயசாந்தி அவர்கள் தன்னை பற்றி கூறும் பொழுது, நான் வீட்டிற்கு ஒரு பொண்ணு, எனக்கு அதிகமாக பாசம் கொடுத்து வளர்த்தனர். ஆனால் செல்லம் என்பதை கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மிலிட்டரி சிஸ்டத்தில் தான் என்னை வளர்த்தார்கள். சிறுவயதில் பள்ளி வீடு டான்ஸ் கிளாஸ் இதை தவிர வேறு எங்கும் நான் சென்றதில்லை.

படம் பார்க்க வேண்டும் என்றால் கூட என்னுடைய தந்தை அந்த படத்தை முதலில் பார்த்துவிட்டு அவருக்கு அது சரியாக இருந்தால் மட்டுமே என்னை அழைத்துச் செல்வார். இப்படி வளர்த்த என் அப்பாவிற்கு நான் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார்.

ஒரு நாள் அதற்காக போட்டோ சூட் எடுக்க போட்டோ ஸ்டூடியோ விற்கு நாங்கள் சென்றிருந்தோம். அதன் பிறகு, இயக்குனர் பாரதிராஜாவின் கார் பழுதாகி அவர் எதிர்பாராத விதமாக அதே போட்டோ ஸ்டூடியோ விற்கு சென்று இளைப்பாரி இருக்கிறார். அப்பொழுது என்னுடைய போட்டோவை பார்த்துவிட்டு இந்தப் பெண் அழகாக இருக்கிறார் யாரென கேட்க, அதன் பின்னர்தான் அவருடைய படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று மனம் திறந்து தனக்கு நடந்தவற்றை கூறுகிறார் விஜயசாந்தி அவர்கள்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு 13 14 வயது இருக்கும் பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன என்றும், வருடத்திற்கு நான் 17 படங்களில் நடித்த கொண்டிருந்தேன் என்றும் விஜயசாந்தி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். தூங்குவதற்கு கூட நேரம் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே துண்டை விரித்து படுத்து உறங்கி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிக்கும் பொழுது நானும், அருணாவும் நடிக்கும்போது, அதில் ஏதோ தவறு உள்ளது என்று நினைத்து அடித்துவிட்டார்.. உண்மையிலேயே நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால்தான் எனக்கு கோபம் வந்தது. அதனால் அழுதுகொண்டே கிளம்பி செல்ல போனேன். உடனே கேமராமேன் நிவாஸ் சார், அழக்கூடாது என்று என்னை சமாதானப்படுத்தினார்.. பாரதி ராஜாரும் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
[10:39 PM, 11/7/2024] Vicky: முன்னாள் முதலமைச்சருக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்த கமலஹாசன்!!

முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகை ஜெயலலிதா அவர்களுக்கு கமலஹாசன் அவர்கள் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். இதனைப் பற்றிய சுவாரசியமான தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சிறுவயதிலிருந்தே கலையின் மீது கொண்ட ஆர்வம் கமலஹாசனை இன்று 70 வயதிலும் புதிய புதிய பரிமாணங்களை எடுக்க தூண்டி கொண்டிருக்கிறது. இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே பல படங்களில் நடித்துள்ளார்.

நடுவில் சில காலம் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜெயலலிதாவுக்கு அன்புத்தங்கை படத்தில், எம்ஜியாருக்கு நான் ஏன் பிறந்தேன், சிவாஜிக்கு சவாலே சமாளி போன்ற டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார்.

மேலும், தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் சிவாலயா என்ற நடன குழுவையும் இவர் நடத்தி வந்துள்ளார். அதன் பின்னர் தான் தங்கப்பனிடம் உதவி நடன இயக்குனராக வேலை பார்த்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரைப் பற்றி கூற வேண்டும் என்றால் சினிமா துறையில் உள்ள அனைத்து பாகங்களையும் தனித்தனியே தன்னகத்தே கொண்டவராக விளங்குபவர் என்றும் கூட கூறலாம். ஏனெனில் இவர் சினிமா துறைக்கு செய்தது பல உண்டு.

அப்படிப்பட்ட இவர், பிலிம்பேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கே சேரும். அதே போல், ‘உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு’, ‘போங்கடா… போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா’, ‘வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது’, ‘ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்’, ‘சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை’, ‘மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்’ போன்ற புகழ் பெற்ற வசனத்தை எழுதியவர் வசனகர்த்தா கமல் ஹாசன். இப்படி பல பெருமைகள் இவரையே சாரும்.