Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வருக்கு ஷாக் கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

விஜயகாந்த் அவர்களின் தேமுதிக கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் மிகப் பெரிய சோதனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியான திமுக, மற்றும் அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளுமே அந்த கட்சியை பொருட்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்சமயம் இருந்தாலும் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் அதிமுக வெளியிடாததால் வெகுவாக கவலையுற்று இருக்கிறது தேமுதிக.

அதேபோல தனியாக போட்டியிடும் அளவிற்கு தேமுதிகவிடம் பலம் கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சி என்று விதத்தில் தன்னுடைய பலத்தை வலு சேர்த்துக் கொள்கிறது. ஆனாலும் தேமுதிக எந்த பக்கம் போக இயலாத சூழ்நிலையில் இருந்து வருகிறது.

இதுபோன்ற ஒரு பரபரப்பான சூழ்நிலையில் தான் விஜயகாந்தை தேர்தல் களத்தில் இறக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தேமுதிக. தொண்டர்களை நோக்கி புன்னகைத்த விஜயகாந்த் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியிருக்கிறார். தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜயகாந்தை வெளியில் கொண்டு வருவதன் மூலமாக எங்கள் கட்சி பலமான கட்சி தான், நாங்கள் வலுவான நிலையில் தான் இருக்கிறோம் என்று பொதுமக்களுக்கு பிரேமலதா விளக்கியிருக்கிறார். அதேபோல சீட் பேச்சுவார்த்தைக்கு உதவும் விதமாக விஜயகாந்தை பொது இடங்களுக்கு கூட்டி வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version