Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட ‘வாத்தி கம்மிங்’

Vaathi coming

தளபதி விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஈர்த்தது.

கேட்பவரை தாளம் போட்டு ஆட வைக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் , 320 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் வலையொளியில் கடந்துள்ளது.

அதிகமான வார்த்தைகள் இல்லாமல் ஆட வைக்கும் இசைகளுடன் கூடிய இந்த பாடல், சிறியவர் முதல் பெரியவர் வரை கவனத்தை ஈர்த்தது.

இசையமைப்பாளர் அனிருத்தின் அபரிதமான இசையில், தளபதி விஜயின் துள்ளலான நடனத்தில் இந்த பாடல் மிகப்பெரும் ஹிட் அடித்து, இன்று 3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்டு இருக்கிறது.

Exit mobile version