Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜிலன்ஸுக்கே அல்வா கொடுக்க பார்த்த இளங்கோவன்!

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக திகழ்ந்து வருபவர் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் அவருடைய வீடு உட்பட சுமார் 36 இடங்களில் நேற்றைய தினம் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள்.

சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெத்தநாயக்கன்பாளையம் அருகே இருக்கும் புத்திரகவுண்டன்பாளையம் தான் இளங்கோவனின் சொந்த ஊர் என்று சொல்லப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதா பேரவையில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக பணிபுரிந்து வரும் இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், அதோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு வலதுகரமாக திகழ்ந்து வருபவர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சமநிலையில், இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் வருமானத்தை விடவும் 131 சதவீதத்துக்கும் அதிகமாக சேர்த்து இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது என தெரிவிக்கிறார்கள். அதாவது அவர்கள் 3 கோடியே 78 லட்சத்து 33 ஆயிரத்து 755 ரூபாய் மழையில் கூடுதலாக சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இதனைத்தொடர்ந்து இளங்கோவனின் புத்திரகவுண்டன்பாளையம் இல்லம், தோட்டம் மற்றும் அலுவலகம் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என அனைத்திலும் நேற்று முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை செய்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை எந்த சமயத்தில் வேண்டுமானாலும் தன் வீட்டில் சோதனை செய்யலாம் என்பதை உணர்ந்து கொண்டு இருக்கிறார் இளங்கோவன், அதோடு சென்ற சில வார காலமாகவே அவரை கண்காணிக்கும் விதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. அதாவது சோதனை செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருவார்கள் என்ற தகவலை சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை செய்ததாக சொல்லப்படுகிறது.

அதாவது இந்த தகவலை கசிய விட்டு அந்த தகவலின் அடிப்படையில் இளங்கோவன் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்று அவருக்கே தெரியாமல் அவரை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக கண்காணித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் எப்போதும் தன்னுடைய கார் ஓட்டுநர் உடன் தன்னுடைய வாகனத்தில் பயணம் செய்யும் இளங்கோவன் கடந்த சில வார காலமாகவே அவரே காரை செலுத்திக் கொண்டு குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளுக்கு தான் மட்டுமே சென்று வந்ததாக தெரிகிறது, அதோடு காலை தான் தன்னுடைய வீட்டில் இருந்தே கிளம்புவார் இப்படி தன்னுடைய வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலும், இருந்த ஆவணங்களை தனக்கு நெருக்கமான சேகோ பேக்டரி, முக்கிய நபர்கள் இடம் கொடுத்து பாதுகாத்து வைத்து விட்டார் என சொல்லப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த சோதனைக்காக கடந்த 21 தேதி இரவு திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மதியழகன் தலைமையில் காவல்துறையினர் சேலத்தில் வந்து இறங்கியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் சேலம் வந்த அதே சமயம் புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு ஆத்தூரில் இருக்கும் தனக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நெருக்கமான ஒரு மருத்துவர் வீட்டுக்கு சென்று விட்டார் இளங்கோவன், 11:00 வரையில் அந்த மருத்துவ நண்பரின் வீட்டிலேயே இருந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் 6:00 மணி அளவில் எல்லாம் புத்திரகவுண்டன்பாளையம் அதில் இருக்கக்கூடிய இளங்கோவன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருகை தந்து விட்டார்கள். வீடு பூட்டி இருக்கின்றது. அந்த வீட்டில் எல்லா கதவுகளும் சென்சார் பொருத்தபட்டவை இளங்கோவன் கைரேகை இருந்தால் மட்டுமே அந்த கதவினைத் திறக்க முடியும், காவல்துறையினர் இளங்கோவனுக்காக காத்திருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று காலை 11 மணி அளவில் ஆத்தூரில் இருந்து கள்ளகுறிச்சிக்கு கிளம்பி சென்ற இளங்கோவன் சென்னையில் இருந்து வருவதாக தெரிவித்து கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னுடைய கை ரேகை பதிந்து கதவுகளை திறந்து இருக்கிறார். அதன் பின்னரே அவருடைய இல்லத்தில் சோதனை நடந்ததாக தெரிகிறது. இரவோடு இரவாக இளங்கோவன் சென்ற சமயத்தில் என்னென்ன எடுத்துச் சென்றார் என்பது தொடர்பான விசாரணையும் அவரிடம் நடத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது.

ஆனாலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்துவதற்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து உடனடியாக இளங்கோவன் சேலம் விரைந்து வந்திருக்கிறார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின இருந்தாலும் சேலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கால்பதித்த உடனே இரவோடு இரவாக ஆத்தூர் சென்ற இளங்கோவன் அங்கிருந்து தன்னுடைய வேண்டப்பட்டவர்கள் அனைவரையும் எச்சரித்து ஒரு சில முன்னேற்பாடுகளை செய்து விட்டார் என தெரிவிக்கிறார்கள்.

இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலமாக 21 கிலோ தங்கம், சுமார் 29 லட்சம் ரூபாய் பணம், 10 சொகுசு கார்கள், பல வங்கி ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றதாக சொல்கிறார்கள்.

அதேநேரம் கொடநாடு வழக்கில் விபத்தில் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் குடும்பத்தினரிடம் நேற்று காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்த சூழ்நிலையில், ஒரே சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டு திசையிலும் இருந்து நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

Exit mobile version