Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறேன்..’ நடிகர் விக்ரம் அறிவிப்பு

‘சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறேன்..’ நடிகர் விக்ரம் அறிவிப்பு

நடிகர் விக்ரம் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். அப்படி அவர் நடித்த சேது, பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் அவரை முன்னணி நடிகராக்கின.ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு பேர்சொல்லிக்கொள்ளும் படி ஹிட் படம் அமையவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடலாக ‘சோழா சோழா’ என்ற பாடல் வெளியானது. இந்த நிகழ்வு ஐதராபாத்தில் நடந்த நிலையில் அதில் விக்ரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று அறிவிததது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு மேலும் சில படங்களில் நடிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது சம்மந்தமாக வதந்திகள் பரவின நிலையில் நலமாக இருப்பதாக அறிவித்தார். சமீபத்தில் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் விக்ரம். இது சம்மந்தமாக வீடியோ வெளியிட்ட அவர் ” ரஞ்சித் படத்துக்காக நான் தயாராகி வருகிறேன். நண்பர்கள் டிவிட்டரில் இணைய சொன்னார்கள். டிவிட்டர் தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் லேட்டாக இணைகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் விக்ரம்க்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

Exit mobile version