Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக 5 மொழிகளில் டப்பிங் பேசும் விக்ரம்… வைரல் வீடியோ!

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக 5 மொழிகளில் டப்பிங் பேசும் விக்ரம்… வைரல் வீடியோ!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாக டீசர் சமீபத்தில் வெளியானது. சென்னையில் இதற்காக படக்குழுவினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியும் நடந்தது.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியானது. உடல்நலக்குறைவு காரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவில்லை.

இது விக்ரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் அவர்களுக்காக இப்போது புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் விக்ரம் பேசும் வசனம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அந்த வசனத்தை ஐந்து மொழிகளில் விக்ரம் டப்பிங்கின் போது பேசிய வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.

Exit mobile version