Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வயதான ஜென்டில்மேன் போல் தோற்றமளிக்கும் விக்ரம் :படம் கோப்ரா!!

தமிழ் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தனது கெட்டப்புக்கு என்றே பல ரசிகர் பட்டாளத்தையக் குவித்து வைத்துள்ளார்.ஒரு படத்தில் பல வேடங்களில் நடிக்கும் பெருமை கமல்ஹாசனுக்கு அடுத்து இவரையே சாரும்.

இவர் எடுக்கும் வேடங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இது போன்ற படங்களை எப்படி தேர்ந்தெடடுப்பார் என்பது இவருக்கு மட்டுமே வெளிச்சம்.

சியான் விக்ரம் கோப்ரா என்னும் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.

இப்படத்திலும் அவர் 7 கெட்டப்புகளில் நடித்துள்ளார் மேலும் படத்தின் first look பெரும் எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அண்மைக்காலத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில் தற்போது வெளிவர உள்ள இந்த கோப்ரா படம் நல்ல வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு படத்தின் second look வெளியிடப்பட்டது. தற்போது நாளை காலை 10:32மணிஅளவில் படத்தின் டீசர் வெளியிடப்போவதாக படத்தின் நடிகர் விக்ரம் சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் தகவலை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version