Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேடையில் இயக்குனர் பாலாவைப் பற்றி பேசிய விக்ரம்… உடைந்த நட்பு மீண்டும் சேருமா?

மேடையில் இயக்குனர் பாலாவைப் பற்றி பேசிய விக்ரம்… உடைந்த நட்பு மீண்டும் சேருமா?

நடிகர் விக்ரம் தற்போது தன்னுடைய கோப்ரா படத்தின் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். அப்படி அவர் நடித்த சேது, பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் அவரை முன்னணி நடிகராக்கின.ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு பேர்சொல்லிக்கொள்ளும் படி ஹிட் படம் அமையவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

கோப்ரா படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். சமீபத்தில் திருச்சி சென்ற அவர் தற்போது மதுரைக்கு சென்று அங்கு அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் “மதுரை எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். என் தந்தை இந்த கல்லூரியில்தான் படித்தார். என் நண்பர்களான இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியவர்கள் இங்கிருந்துதான் வந்தார்கள். நான் ஹாலிடேவை விரும்பிக் கொண்டாடி மகிழும் மதுரை. என் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து உங்கள் ஊர்க்காரர்தான்” எனப் பேசியுள்ளார். வர்மா படம் சம்மந்தமாக இயக்குனர் பாலா- விக்ரம் இடையே மோதல் எழுந்தது. ஆனால் அதை மறந்து இப்போது விக்ரம் பாலா பற்றி பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Exit mobile version