தமிழகத்தில் நாள்தோறும்.நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறது அதோடு இரவு நேரங்களில் ஊரடங்கு வார இறுதியிலும் முழு நேர ஊரடங்கு போன்றவையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் இந்த நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களான கோவில்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் என்று எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல சுற்றுலாத்தலங்கள் போன்றவையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நோய்களை தடுப்பதற்கு 15 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பித்தால் முழுமையாக அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இதனால் பாதிக்கப்படக்கூடிய வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு ஆவன செய்யவேண்டும். சிறுசிறு கடைகளுக்கு காவல்துறையினர் அதிகமான அபராதத்தை இருக்கிறார்கள். தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் அன்றாட பொது மக்களுக்கு அரசு மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது?
