விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: ஒரு ஓட்டுக்கு வேஷ்டி சேலை.. கையும் களவுமாக சிக்கிய திமுக!!
விக்கிரவாண்டி தேர்தலானது வரும் ஜூலை மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக அதிமுக நாதக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவ உள்ளது.இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று மூன்று கட்சிகளும் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதனிடையே பறக்கும் படையினரும் ஆங்காங்கே வண்டி வாகனங்கள் என அனைத்தையும் சோதனை செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக அமைச்சர் எவ வேலு கொடுத்துவிட்டதாக மருத்துவர் வாகனத்தில் ஒரு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது குறித்து பாமக வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.மேற்கொண்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திமுகவானது ஓட்டுக்காக மக்களுக்கு பட்டு வேஷ்டி மற்றும் புடவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதனைக் கண்ட பாமக நிர்வாகிகள் அவற்றை மீட்டு தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதே போல தான் சில தினங்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது ஆதாரத்துடன் பிடிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருக்குமா என்ற நோக்கத்தில் பாமக – வை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளும் கட்சி தனது அதிகாரத்தை இவ்வாறு பல இடங்களில் பயன்படுத்தி தப்பித்து வருகிறது.இதனிடையே தற்பொழுது இது குறித்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பெருமளவில் எதிர்பார்க்கின்றனர்.