வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!

0
190

வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!

தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி அருகே வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்து ஓடியதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கருப்பட்டி சொசைட்டி சாலையின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து இன்று காலையில் திடீரென பால் வடியத் தொடங்கியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்து வருகின்றனர். சாலையில் சென்ற மக்கள் கூட்டம் கூட்டமாக மரத்தின் அருகே சென்று உற்று பார்க்கின்றனர். மரத்தில் இருந்து பால் எப்படி வரும் என்று யோசித்தபடியே இயற்கையிடம் லயித்து போயுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று மரத்தில் பால் வடியும் செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இந்நிகழ்வை பலர் செல்போன் மூலம் போட்டோவும், வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் பக்கத்து கிராம மக்களுக்கு பரவியதால் வேப்ப மரத்தின் அருகே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. வழக்கமாக இதுபோன்று மரத்தில் பால்வடிந்தால் அந்த மரத்தில் சாமி இருப்பதாக கருதி வெட்டாமல் அங்கு பூஜை நடத்தி வழிபாடுகளும் நடைபெறுகிறது.

அந்த காலத்தில் இருந்தே மரங்களை வெட்டக் கூடாது என்பதற்காக மரத்தில் சாமி இருப்பதாக கூறி மரத்தையும், இயற்கையையும் நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்தார்கள். மரங்கள்தான் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.