Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீதாதேவியின் தாகத்தைத் தீர்த்த வில்லூண்றி தீர்த்தம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகேயிருக்கிறது தங்கச்சிமடம் என்ற கிராமம் ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 பீடங்களில் ஒன்றான வில்லூண்டி தீர்த்தம் இங்கு தான் இருக்கிறது. எங்கே பிரகதீஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருக்கிறது.

இந்த இடத்தில் கடலுக்குள் அமைந்திருக்கும் வில்லூன்றி தீர்த்தம் எனும் இந்த புனித நீர் ஊற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலமானது என தெரிவிக்கப்படுகிறது, சீதையை சிறைபிடித்து சென்ற ராவணனுடன் போரிட்டார். ராமபிரான். போரின் முடிவில் ராவணனை அழித்து சீதையை மீட்டுக் கொண்டு இந்த பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது சீதைக்கு தாகம் உண்டானது, உடனடியாக ராமபிரான் தன்னுடைய கையிலிருந்த வில் ஒன்றை கடலில் ஒரு பகுதியில் ஊன்றினார் அதிலிருந்து தண்ணீர் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதிலிருந்து வெளிப்பட்ட தண்ணீரை குடித்து தாகத்தைத் தணித்தார் சீதாதேவி. ராமாயண காலத்தில் தோன்றிய அந்த புனித நீரூற்று தான் வில்லூண்டி தீர்த்தம் இந்த தீர்த்தம் கிணறு வடிவில் கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரம் கடலுக்குள் அமைந்திருக்கிறது. இதனை சென்றடைய நீண்ட பாலம் ஒன்று கிணறு முடியுமிடத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

Exit mobile version