Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வித்தியாசமான விநாயகர் சிலைகள் இருக்கின்ற ஆலயங்கள்!

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது திருபுவனம் கோட்டை. இங்கே விநாயக கோரக்கர் அருள் பாலித்து வருகிறார். நோய்களை தீர்ப்பதிலும் சனி தோஷத்தை நீக்குவதிலும் இந்த விநாயகர் வல்லவர் என சொல்லப்படுகிறது. விநாயகர் வடிவில் கோரக்க சித்தர் அருள்பாலிப்பதால் இவருக்கு கோரக்க விநாயகர் என பெயர் உண்டானது.

ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும், உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும், தன்னுடைய கதிர்களை பாய்ச்சி சூரியன் இந்த விநாயகரை வணங்குகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும், ஈசன்ய திசையை நோக்கி விநாயகர் வீற்றிருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேரியில் இருக்கிறது மிளகு பிள்ளையார் கோவில். மழை பொய்த்து போகும் காலங்களில் இவருடைய உடலில் மிளகு அரைத்து தடவி அபிஷேகம் செய்தால், உடனடியாக மழை பெய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தை அடுத்துள்ள தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அதிலிருக்கின்ற விநாயகரை தரிசனம் செய்யலாம்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள் பாலிக்கிறார் இங்கே சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நடராஜபெருமானுடன் பஞ்சமுக ஹேரம்ப கணபதி திருவீதிவுலா வருகிறார்.

கோவை மாவட்டம் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசனம் செய்யலாம். இந்த கோவிலில் விநாயகர் அருகில் நந்தியம் பெருமாள் வீற்றிருப்பது தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி கணபதி என்ற காவல் கணபதி வீற்றிருக்கிறார். இவர் தலையை ஆட்டும் விதமாக இடது புறம் சாய்த்தபடி அருள்பாலிக்கிறார்.

சிதம்பரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருநாரையூர் எங்கே நம்பியாண்டார் நம்பிக்கு அருள் பாலித்த பொள்ளாப்பிள்ளையார் அருள் பாலித்து வருகிறார்.

மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு சைவத் திருமுறைகளை தொகுக்க உதவி புரிந்தவர். இவர் உளியால் செதுக்கப்படாத பிள்ளையார் என்பது இவருடைய பெயரின் விளக்கமாகும்.

Exit mobile version