Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அப்பாவானார் விஜய் டிவியின் முக்கிய சீரியலின் பிரபலம்!! யாருன்னு தெரியுமா?!!

அப்பாவானார் விஜய் டிவியின் முக்கிய சீரியலின் பிரபலம்!! யாருன்னு தெரியுமா?!!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிரபலமான தொடர் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழைப் பெற்றவர் வினோத் பாபு.

இவர் இதற்கு முன்பு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வினோத் பாபு மற்றும் அவரது மனைவி சிந்து இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அத்துடன் வினோத் பாபு விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கின்ற தென்றல் வந்து என்னை தொடும் எனும் சீரியலிலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வினோத் பாபு அப்பாவாக உள்ளார். வினோத் பாபுவின் மனைவி சிந்து கர்ப்பமாக இருக்கின்றார். இத்தகைய மகிழ்ச்சியான செய்தியை வினோத் பாபு தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் அந்த பதிவில் , விரைவில் தங்கள் குடும்பம் வளரப்போகிறது என்றும் உங்கள் ஆசீர்வாதமும், வாழ்த்துக்களும் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாது பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Exit mobile version