Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே ஒரு போன் கால் மூலமாக வந்த வினை… கதறும் பிரபல சின்னத்திரை நடிகை!!

 

ஒரே ஒரு போன் கால் மூலமாக வந்த வினை… கதறும் பிரபல சின்னத்திரை நடிகை…

 

பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் போன் கால் மூலமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பண மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை இலானி. இவர் தமிழில் தென்றல், பிரியமானவள் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர். மேலும் காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் கால் மூலமாக வங்கி மோசடி செய்துள்ளதாக காவல் துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

 

சின்னத்திரை நடிகை இலானி அளித்த புகாரில் “சில வாரங்களுக்கு முன்னர் எனது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி என்னிடம் பேசினார். பின்னர் அவரிடம் கடனுக்கு எவ்வளவு வட்டி என்று கேட்டேன். எனது செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்பி வைத்து அதில் போய் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த நபர் கூறினார். அந்த லிங்கில் போய் பார்த்த பொழுது வட்டி அதிகமாக இருந்தது. அதனால் கடன் வேண்டாம் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டேன்.

 

சிறிது நேரம் கழித்து ஒரு செல்போனில் இருந்து 8.80 லட்சம் ரூபாய் கடன் கிடைத்துள்ளதாகவும் அதற்கு மாதத் தவணையாக 10998 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்தது.

 

அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்ட நபரிடம் நான் மீண்டும் கால் செய்து பேசினேன். அப்போது அந்த அடையாளம் தெரியாத நபர் என்னை மிரட்டினார். இந்த புகார் மனுவில் நிதி நிறுவனத்தில் இருந்து பேசிய நபர் எண், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து உள்ளேன். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தற்போதைய காலத்தில் வங்கி மோசடிகள் அதிகரித்து வருகின்றது. அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தாலோ அல்லது குறுஞ்செய்திகள் வந்தாலோ வாட்ஸ்ஆப் மூலமாக ஏதாவது லிங்குகள், அழைப்புகள், மெசேஜ்கள் வந்தாலோ இல்லை ஜிமெயிலில் இருந்து ஏதாவது லிங்குகள் வந்தாலோ அதை தொடாமல் தவிர்த்தவிடுங்கள்.

 

Exit mobile version