Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை மீறினால் 3 ஆண்டு ஜெயில் 25000 அபராதம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!    

Violation of this 3 years jail 25000 fine!! Action taken by Tamil Nadu Government!!

Violation of this 3 years jail 25000 fine!! Action taken by Tamil Nadu Government!!

இதை மீறினால் 3 ஆண்டு ஜெயில் 25000 அபராதம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை குறித்து விளம்பர நிறுவனத்தின் மீது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதியு செய்யப்பட்டு விசாரணை  மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் அம்மாவட்டத்தில் பல இடங்களில் வைக்கப்பட்ட சுமார் 185 பேனர்கள் அகற்றப்பட்டன. பேனர்கள் மற்றும் விளம்பர பலகை வைப்பதால் அது காற்றின் போது விழுந்து விபத்துகளை ஏற்படுத்துவதால் அதனை தடுக்கும் வகையில் தற்பொழுது தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளது. அதன் முதல் படியாக தமிழகம் முழுவதும் பேனர்கள் மற்றும் விளம்பரபலகை வைக்ககூடாது.

அப்படி வைத்தால் அம்மாவட்ட ஆட்சியாரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வைக்க வேண்டும் மற்றும் நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு சமந்தப்பட்ட உள்ளாச்சி காவல் துறையில் அனுமதி பெற்று வைக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுமதி இல்லாமல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகை வைப்பவர்கள் மீது  அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன் விளைவாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 25000 ரூபாய் அபதாரம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் உரிமை காலம் இல்லாமல் பேனர்கள் வைக்கமுடியாது.உரிமை காலம் முடிந்த உடன் பேனர்களை அகற்றி விட வேண்டும்.

பேனர்கள் வைத்து விபத்துகள் நடந்தால் பேனர்கள் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. தற்பொழுது பேனர்களை அகற்றுவதற்கு காவல்துறை  தனிக்ககுழு அமைத்து செயல்பட்டு வருகிறது.இதன் முலம் விபத்துகளை தடுக்க முடியும் என்பதால் இப்பணியை அரசு மேற்கொண்டுள்ளது.

Exit mobile version