திரை துறையில் பெண்களிடம் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள்!! மணிரத்னம் எடுத்த அதிரடி முடிவு!!

0
98
Violations of women in the film industry!! Action taken by Mani Ratnam!!

இந்த உலகில் பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள திரை துறையில் பல நடிகைகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளன. இவற்றை தடுப்பதற்காகவும் தட்டி கேட்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் ஹேமா கமிட்டி.

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஆட்டி வைத்தது.

மீடூ இயக்கத்திற்கு பின் திரைத்துறையில் பாலியல் குற்றங்கள் குறித்த பெரியளவிலான விளிப்புணர்வை ஹேமா கமிட்டி ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியான பிறகு, மலையாள சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகைகள் திரைத்துறையைச் சேர்ந்த ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.

மேலும், மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் , தெலுங்கு திரையுலகிலும் இதன் தாக்கம் பிரதிபலித்தது. தமிழ் திரையுலகில் நடிகர் சங்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இந்த விழாவில் திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த சிறப்பு விவாதம் ஒருங்கிணைக்கப்பட்டது. நடிகை சுஹாசினி , நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட சுகாசினி பேசியிருப்பதாவது :-

மற்ற துறைகளைக் காட்டிலும் திரைத்துறையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை செய்துவிட்டு மறுபடி உங்கள் வீட்டிற்கு இரவு திரும்பிச் செல்வீர்கள். ஆனால் சினிமா அப்படி இல்லை. 200 முதல் 300 பேர் கொண்ட படக்குழு ஒரு புது இடத்திற்கு சென்று ஒரு குடும்பமாக வாழ்வீர்கள். அப்போது தெரிந்தோ தெரியாமலோ சில எல்லைகள் மீறப்படுகின்றன. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில் குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக சினிமாவில் புதிதாக வரும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவம் இருப்பதில்லை . அதை சிலர் தவறாக பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், இன்று காலை என் கணவரிடம் உங்கள் படப்பிடிப்பின் போது ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு முறை படப்பிடிப்பின் போது படக் குழுவைச் சேர்ந்த ஒருவர் வரம்பு மீறி நடந்து கொண்டதாகவும் அவரை வேலைவிட்டு தூக்கியதாகவும் அவர் தெரிவித்தார். வரம்பு மீறி நடந்து கொள்பவர் யாராக இருந்தாலும் அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.