Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு 

#image_title

மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இன்று ராம நவமியை முன்னிட்டு நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே காசிபாரா பகுதியில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் இறங்கிய கும்பல் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் அட்டூழியம் செய்தனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில் அந்த இடத்தில் போலீஸ் படை அதிகளவில் குவிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் காவல்துறையின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில், ராம நவமி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட ஈடுபட்டவர்களில் இதுவரை 36 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version