ஹிஜாப் விவகாரம்! மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர்!

0
123

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் துறையூர் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனை மீறும் விதமாக அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருகை தந்தார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

இதனை கண்டிக்கும் விதமாக அந்த முஸ்லிம் மாணவிகள் அதே இடத்திலமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மாணவர்கள் காவியுடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த விவகாரம் மிகப்பெரிய விச்வஸ்ரூப்ஸமெடுத்தது இந்த சூழ்நிலையில், கடந்த 9ஆம் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கர்நாடகத்தில் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கி கர்நாடக அரசு கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டது.

இதுகுறித்து இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வர தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இந்த சூழ்நிலையில், கர்நாடகத்தில் 14ஆம் தேதி உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுமென்று கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனடிப்படையில், கர்நாடகத்தில் இன்று உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10ம் தேதி வரையில் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பள்ளியில் அமைதி நிலவ தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருக்கிறார். அனைத்து மாணவர்களும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரிகளுக்கு 16ஆம் தேதி வரையிலும், மற்ற கல்லூரிகளுக்கு 17-ஆம் தேதி வரையிலும், ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், உயர்நிலைப் பள்ளிகள் திறப்பு தொடர்பாக அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் இப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது தெரிவித்திருக்கிறார்.

அதாவது, கர்நாடக மாநிலத்தில் இன்றைய தினம் உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன, இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும், ஆலோசனை வழங்கினேன்.

இதில் பள்ளிகளில் நல்லிணக்கம் மற்றும் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன இதை காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் என்று கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் தெரிவித்திருக்கிறார்.