Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செப்டம்பர் 18 முதல் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!!! ஏன் என்று தெரியுமா!!?

செப்டம்பர் 18 முதல் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!!! ஏன் என்று தெரியுமா!!?

திருமலை திருப்பதி கோவிலில் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 18 முதல் 26ம் தேதி வரை சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் பிரமோற்சவங்கள் நடைபெறவுள்ளது. இதற்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை(ஆகஸ்ட்30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். இவர்தான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகரன் அவர்கள் “திருப்பதியில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவம் செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதே போல நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறவுள்ளது.

திருப்பதியில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்தின் முதல் நாளில்(செப்டம்பர் 18) மாநில அரசின் சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் பட்டு வஸ்திரம் சமர்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை விஐபி தரிசனம் கிடையது. விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகின்றது. மேலும் வாகன சேவைகள் மூலமாக சிறப்பான தரிசனம் வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

 

 

Exit mobile version