குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி,இருமல்,வைரஸ் காய்ச்சல் போன்றவை அதிகளவு பரவுகிறது.இதில் இருந்து மீள மூலிகை தேநீர் செய்து தினமும் மூன்று வேளை பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
*நெல்லிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
*புதினா பொடி – 1/4 தேக்கரண்டி
*சுக்குப் பொடி – 1/4 தேக்கரண்டி
*ஆவாரம் பூ பொடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
மேல சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பொருட்கள் அனைத்தும் சித்த வைத்திய சாலை மற்றும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
ஸ்டெப் 01:
ஒரு கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து கால் தேக்கரண்டி அளவிற்கு புதினா பொடியை அதில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
அடுத்து கால் தேக்கரண்டி ஆவாரம் பூவை இப்பொழுது கொட்டி கலந்து கொள்ளுங்கள்.பிறகு கால் தேக்கரண்டி சுக்குப் பொடியை கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 03:
அடுத்ததாக ஒரு பாத்திரம் எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.
ஸ்டெப் 04:
தண்ணீர் சூடாகி வந்ததும் கலந்து வைத்துள்ள பொடியை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப் 05:
இந்த பானம் நன்றாக கொதித்து வந்ததும் ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேன் சேர்த்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் இந்த பானத்தை குடித்தால் சில தினங்களில் அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.
தேவையான பொருட்கள்:-
*பப்பாளி இலைப் பொடி – 1/2 தேக்கரண்டி
*வேப்பிலை பொடி – 1/4 தேக்கரண்டி
*பாகற்காய் பொடி- 1/4 தேக்கரண்டி
*தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் பப்பாளி இலை,வேப்பிலை மற்றும் பாகற்காய் இலையை வெயிலில் காய வைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.இரண்டு நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்துள்ள பொடியை அதில் கொட்டி கொதிக்க வையுங்கள்.
ஸ்டெப் 03:
இந்த மூலிகை தேநீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலில் உள்ள வைரஸ்,பாக்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகள் அழிந்துவிடும்