Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு!

ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு!

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜிரவால் உள்ளார்.2017 ஆம் ஆண்டு டெல்லியில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது. கொல்க்கத்தாவில் தனியார் நிறுவனத்திடம் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பணம் பரிமாற்றம் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரணை செய்ததில் அமைச்சர் சத்யந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் 1.62 கோடி வரை மோசடி செய்ததாக தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வந்த நிலையில் இவர் கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யந்திர ஜெய் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி, அமைச்சர் கேட்ட ஜாமீன் வழங்காமல் ரத்து செய்தது. ஏனென்றால் சிறை விதிகளை மீறி அமைச்சர் உள்ளே சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சிபிசிஐடி குற்றம் சாட்டியுள்ளனர்.

அது குறித்து வீடியோக்களும் வெளியாகி உள்ளது.அந்த வீடியோவில் பணியாளர் ஒருவர் அமைச்சருக்கு தலை கால்களை பிடித்து விட்டு மசாஜ் செய்துள்ளார்.சிறையில் தண்டனை அனுபவிக்காமல் சொகுசாக இருந்துள்ளார். இதனால் நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Exit mobile version