Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கன்னி ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

கன்னி ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பதிவின் மூலம் வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரவிருக்கும் சனி பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம். தை மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு சனி பெயர்ச்சி ஆகின்றார்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை தரக்கூடியதாக அமைய உள்ளது. ஆறாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதனால் தொழில் மற்றும் வேலைகளில் எதிரிகள் இருக்க மாட்டார்கள்.

ஆறாம் இடம் என்பது நோய் எதிரி பகை, கடன் ஆகியவைதான். வேலை உயர், பதவி ,பட்டம் போன்றவைகளும் கிடைக்கும். உங்களுக்கு சிறு சிறு பயணங்கள் அலைச்சல்கள் ஏற்படும். கல்வி சிறப்பாக அமையும். 12ஆம் இடத்தை பார்ப்பதினால் வெளியூரு, வெளிநாடுகளில் சிறந்த பலன் கிடைக்கும்.

இத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நிம்மதி அடையக்கூடிய காலகட்டமாக அமையும். பொருளாதார உயர்வு ஏற்படும். உடம்பில் உள்ள உபாதைகள் அனைத்தும் தீர்ந்து ஆரோக்கியமான வாழ்வை பெறுவீர்கள்.

ஆறாம் இடத்தில் சனி இருப்பதினால் ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு இந்த சனி பெயர்ச்சி சாதகமாக அமைய உள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் எலுமிச்சை விளக்கேற்றி வழிபாடு செய்து பால் மற்றும் தயிர் அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கி கொடுப்பதனால் சிறந்த பலன்களை அடையலாம்.

Exit mobile version