கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!

0
125
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவினரிடம் கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அழைச்சல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பத்தோடு செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.