கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பு உண்டாகும் நாள்!!

0
166
#image_title

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பு உண்டாகும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பு உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகலாம். அரசியல் இருக்கும் நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் சில இடையூறுகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு வித குழப்பம் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையும் இழுபறிகிறது என்ற கவலையுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அருமையாக செயல்பட வேண்டும் என்றால் படிப்பில் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு வேலையிலும் கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் முன் யோசனையுடன் செயல்பட வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.