கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள்!
கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். ஏனென்றால் விரைய ஸ்தானத்தில் சந்திரன் உள்ளதால் திடீர் என்று செலவுகள் வர வாய்ப்புள்ளது. குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் கண்டிப்பாக வந்து சேரும்.
பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. வருமானம் வந்து சேர்ந்தாலும், செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தின் பணியிட மாறுதல் சிலருக்கு கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மேம்படும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் திடீரென வெளியூர் பிரயாணம் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள்.
கலைத்துறையில் சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகன பயணங்கள் மூலம் சில நன்மைகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் வெகு சிறப்பான முன்னேற்ற நிலை உண்டாகும். வாழ்த்த வயதில் உள்ள அன்பர்கள் சந்தோஷ வானில் சிறகடித்து பரப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்