Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – இளம்பெண்ணால் பரபரப்பு!!

#image_title

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது.

அதில் கலந்து கொண்ட பொது மக்களை, காவல் துறையினர் சோதனை செய்து அனுப்பியுள்ளனர். அதில் ஒரு பெண் மட்டும் பெட்ரோல் கேனுடன் வந்து, ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலை செய்ய முயன்று இருக்கிறாள்.

இதனை அங்கிருந்த பெண் காவலர் கண்டு, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தடுத்து, காவல் நிலையம் அழைத்துசென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அந்த பெண் பெயர் பாண்டிஸ்வரி, வயது (21), ஊர் சிவகாசி என தெரிய வந்தது, மேலும் விசாரணையில் பாண்டிஸ்வரி கூறியது: நான் பத்தாம் வகுப்பு படித்து விட்டு, சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலைபார்த்து வருகிறேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், என்னுடன் வேலை பார்த்து வந்த லோகநாதன் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டேன்.

மூன்று வயதில் சீதா என்று ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள், ஆனால் என் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்படுவது வழக்கம், இந்நிலையில் என் கணவர்,  இனி உன்னுடன் நான் வாழமாட்டேன்,என் குழந்தையை எடுத்துகொண்டு செல்கிறேன் என சொல்லி விட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.

இதுகுறித்து நான், சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். காவலர்களும் என் கணவரை காவல் நிலையம் அழைத்தார்கள், ஆனால் அவர் வரவில்லை.

இதனால் மனமுடைந்த நான், இப்படி ஒரு முடிவை எடுத்தேன் என்று கூறினார்.

பின் இதை விசாரணை செய்த காவலர்கள், இந்த புகார் குறித்து, சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை செய்ய சொல்கிறோம்.

என்று அறிவுரை கூறி பாண்டிஸ்வரியை அனுப்பிவைத்துள்ளனர்.

Exit mobile version