Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியானது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் விருமன் திரைப்படம் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படத்தின் வசூல் குறையவில்லை. இரண்டு நாட்களிலும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் மூன்று நாட்களில் வசூல் 30 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இது கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் என சொல்லப்படுகிறது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நேற்று சக்ஸஸ் பார்ட்டியில் விநியோகஸ்தர் சக்திவேல் படத்தின் கதாநாயகன் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யா ஆகிய இருவருக்கும் வைர பிரேஸ்லெட் அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான படங்களில் விக்ரம் திரைப்படத்துக்குப் பிறகு நல்ல லாபம் பெற்ற படமாக விருமன் அமைந்துள்ளது.

Exit mobile version