நடுநாடு என்றழைக்கப்படும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மணிமுத்தா நதியின் மேற்கு கரையில் அமைந்திருக்கிறது விருத்தகிரீஸ்வரர் ஆலயம்.
இங்கிருக்கின்ற சிவபெருமானுக்கு பழமலைநாதர் என்ற மற்றொரு பெயர் உண்டு. சமய குறவர்களால் பாடல் பெற்ற இந்த தளம் நடுநாட்டு சிவத்தலங்களில் 9வது திருத்தலமாக விளங்குகிறது.
பிரம்மனும், அகத்தியரும், வழிபட்ட பெருமையை கொண்ட இந்த திருக்கோவில் முக்தி, தலம், தீர்த்தம் ,என்ற 3 சிறப்புகளையும் பெற்றுள்ளது மேலும் தனி சிறப்பாக விளங்குகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் பழமலைநாதர் என்ற விருத்தகிரீஸ்வரர் முற்காலத்தில் மலையாய் காட்சி கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக விருதாச்சலத்திற்கு திருமுதுகுன்றம் என்ற பெயரும் இருக்கிறது என சொல்கிறார்கள்.
மலையாக காட்சி கொடுத்த இங்கு இருக்கின்ற இறைவன் பழமலைநாதர் முதுகுன்றிஸ்வரர், பெரியநாயகர், விருத்தகிரீஸ்வரர், என்ற பல பெயர்களை பெற்றுள்ளார்.
அம்மையை பெரிய நாயகி, விருதாம்பிகை என்றும், அழைக்கிறார்கள். குரு நமச்சிவாயத்துக்கு இளமையாக காட்சி கொடுத்ததன் காரணமாக, பாலாம்பிகை எனவும், இளையநாயகி எனவும், அழைக்கிறார்கள்.
புண்ணிய தலம், முக்தி தலம், என போற்றப்படும் இந்த தல புராணத்தில் இந்த தலம் விட்டு காசியில் ஏகினும் இல்லை தவப்பயன், முக்தியும் இல்லையே, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தான் காசிக்கு மேல் வீசம் என்பதால் விருத்தகாசி என்றும் அழைக்கிறார்கள். இந்த தலத்தில் இருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் பழமழை நாதர் 5 எழுத்து ஓதி முக்தி கொடுப்பதாகவும், பெரிய நாயகி முந்தானையை வீசி பிறப்பை அகற்றுவதாகவும், கச்சியப்பர் கந்தபுராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
நாலாபுரம் 26 அடி உயரமுள்ள மதில் சுவரும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும், கொண்ட ஒரு பெரிய கோவிலாகும். கோவிலின் 4 புறங்களிலும் விண்ணை மட்டும் உயரத்தில் 7 சிலைகளை உடைய பெரிய கோபுரங்கள் நிற்கிறது.
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் இருக்கிறது இதனை விளக்கும் விதத்தில் 28 லிங்கங்களை இந்த தளத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த வரலாறு இருக்கிறது என்கிறார்கள்.
இந்த 28 லிங்கங்கள் தனி சன்னதியாக கோவிலில் அமைய பெற்றிருக்கிறது, இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகனும், காட்சி வழங்குகிறார்கள்.
இதுவரையில் உலகில் எந்த கோவிலிலுமில்லாத பெருமையாக இது பார்க்கப்படுகிறது. இந்த கோவிலில் பலவித சிறப்புகளுக்கு உரியவர் பெரியநாயகர் என்றழைக்கப்படும் விருத்தகிரீஸ்வரரருக்கு பௌர்ணமி தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறும் என்கிறார்கள்.
கோவிலில் முதன் முதலாக திருப்பணி செய்த விபச்சித்து முனிவருக்காக காட்சி கொடுக்கும் ஐதீக பெரு விழா மாசிமகப் பெருவிழாவின் 6ம் நாள் நடைபெறுகிறது.
பஞ்ச மூர்த்திகள் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது விநாயகர், பெருமான், முருகப்பெருமான், சிவபெருமான், சக்தி, சண்டிகேஸ்வரர், உள்ளிட்டோர் ஆவார்கள்.
மாசிமகப் பெருவிழாவின் போது இந்த உற்சவம் நடக்கும் காலை, மாலை, உள்ளிட்ட இரு வேலையும் 8 வீதிகளிலும் உலா வருவதை தற்பொழுதும் நம்மால் காண முடியும்.
கோவிலுக்குள்ளே பஞ்சலிங்கமும் அமைந்திருக்கிறது சிவபெருமான் பஞ்சபூத வடிவில் இருக்கிறார் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டி இங்கே பஞ்சலிங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது காற்று- காலகஸ்தி மண்- காஞ்சி ஆகாயம்- சிதம்பரம்- நீர்- திருவானைக்காவல் நெருப்பு- திருவண்ணாமலை உள்ளிட்டவையாகும்.
இந்தக் கோவில் வன்னியடி திருச்சிற்றின் தென்மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 5
திருத்தலங்களும் சென்று வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் ஒவ்வொரு தலத்திலும் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கால பைரவர் காசியில் இருப்பதைப் போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார். பைரவர் கையில் வில்லிருப்பது மற்றொரு தனிச்சிறப்பாகும்.
அருணகிரியாரால் பாடல்கள் பாடப்பட்ட முருகப்பெருமான் இங்கு எழுந்தருளி இருக்கிறார். இப்படி பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த கோவிலை ஒருமுறையாவது சென்று தரிசித்து வாருங்கள்.