Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறப்பு அம்சங்கள் பொருந்திய விருத்தகிரீஸ்வரர் ஆலயம்!

தமிழகத்தை பொறுத்தவரையில் பல கோவில்கள் இருக்கின்றன அதோடு கும்பகோணம் உள்ளிட்ட நகரங்கள் கோவில் நகரங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. மொத்த தமிழகத்திற்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகளை கடந்து தலைநிமிர்ந்து நிற்கிறது. அதோடு அந்த கோவில் உலகப் பாரம்பரியச் சின்னமாக போற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருந்தாலும் கூட ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சமிருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் ஒரு சிறப்பம்சம் மிக்க கோவிலைப் பற்றி காண்போம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுத்தாறு நதியின் மேற்கு கரையில் அமைந்திருக்கிறது விருத்தகிரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவனுக்கு பழமலைநாதர் என்ற மற்றொரு பெயருமிருக்கிறது. சமயக் குரவர்கள் பாடல் பெற்ற தலம் நடுநாட்டு சிவ தலங்களில் 9வது திருத் தலமாக விளங்கி வருகிறது.

அதோடு பிரம்ம தேவரும், அகத்தியரும், வழிபட்ட பெருமை இந்த திருத்தலத்திற்கு உண்டு. மூர்த்தி, தலம், தீர்த்தம், என்ற 3 சிறப்புகளையும் பெற்றிருப்பது மேலும் தனிச்சிறப்பாக விளங்குகிறது.

இங்கே அருள்பாலித்து வரும் பழமலைநாதர் எனும் விருத்தகிரீஸ்வரர் முன் காலத்தில் மலையாய் காட்சி கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, உற்சவத்திற்கு திருமுதுகுன்றம் என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது.

மழையாக அருள்பாலித்து வந்த இங்குள்ள மூர்த்திக்கு பழமலைநாதர், முதுகுன்றீஸ்வரர். பெரிய நாயகர், விருத்தகிரீஸ்வரர் என்று பல பெயர்கள் அமைந்திருக்கின்றன.

மேலும் அம்மையை பெரியநாயகி, விருத்தாம்பிகை எனவும் அழைத்து வருகிறார்கள்0 குருநமச்சிவாயத்துக்கு இளமையாக காட்சி வழங்கியதால் பாலாம்பிகை என்றும், இளைய நாயகி என்றும், அழைத்து வருகிறார்கள்.

புண்ணியத்தலம், முக்தித் தலம் என்று போற்றப்படும் இந்த தலபுராணத்தில் இத்தலம் விட்டு காசியில் எனினும் இல்லை தவப்பயன், முத்தியும் இல்லையே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தான் காசிக்கு மேல் வீசும் என்பதால் விருத்தகாசி என்றும் அழைக்கிறார்கள்.

இந்த தலத்திலிருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் பழமலைநாதர் ஐந்தெழுத்து ஓதி முக்தி கொடுப்பதாகவும். பெரியநாயகி முந்தானையால் வீசி பிறப்பை அகற்றுவதாகும் கச்சியப்பர் கந்த புராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கோவிலின் நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதில் சுவர், 160 அடி நீளமுள்ள 390 அடி அகலமும், கொண்ட ஒரு பெரிய கோவில் என்று சொல்லப்படுகிறது. கோவிலின் 4 புறங்களிலும் விண்ணை முட்டும் உயரத்திற்கு 7 நிலைகளைக் கொண்ட பெரிய கோபுரங்கள் இருக்கிறது.

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் இருக்கின்றன, இதனை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை என்ற தலைப்பில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த வரலாறு இருக்கிறது.

இந்த 28 லிங்கங்கள் தனி சன்னதியாக கோவிலில் அமையப்பெற்றுள்ளது. இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன், முருகனும் காட்சியளிக்கிறார்கள். உலகில் எந்த கோவிலிலும் இல்லாத பெருமையாக இது பார்க்கப்படுகிறது.

இக்கோவிலில் பலவித சிறப்புகளுக்கு உரியவர் பெரிய நாயகர் என்று அழைக்கப்படும் விருத்தகிரீஸ்வரர் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

கோவிலில் முதன்முதலில் திருப்பணி செய்த விபசித்து முனிவர் காட்சி கொடுக்கும் ஐதீக திருவிழா மாசி மாத மகப்பெரு விழாவின் 6ம் நாள் வருடம்தோறும் நடந்தேருக்கிறது.

பஞ்ச மூர்த்திகள் என்று தெரிவித்தவுடன் நினைவுக்கு வருவது விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர், உள்ளிட்டோர் அவர்கள் மாசி மக பெருவிழாவின் போது இந்த உற்சவ மூர்த்திகள் காலை, மாலை இரு வேலையும், 8 தெருக்களிலும், உலா வருவதை தற்போதும் காண முடிகிறது.

கோவிலுக்குள்ளே பஞ்சலிங்கம் அமைந்திருக்கிறது சிவபெருமான் பஞ்சபூத வடிவிலிருக்கிறார் என்பதை பொது மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இங்கே பஞ்சலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காற்று காலகஸ்தி, மண் காஞ்சி, ஆகாயம் சிதம்பரம், நீர் திருவானைக்காவல், நெருப்பு திருவண்ணாமலை, உள்ளிட்டவை பஞ்சலிங்கங்களாகும்.

இந்த திருக்கோவில் வன்னியடி திருச்சுற்றின் தென்மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 திருத்தலங்களுக்கும் சென்று வழிபட முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டால் ஒவ்வொரு தலத்திலும் கிடைக்கும் பலன்கள் அனைத்தையும் இங்கு ஒரே இடத்தில் பெறலாம் என்பது மக்களிடையே இருக்கும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கோவிலில் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர். பைரவர் கையில் வில் இருக்கிறது

இது மற்றுமொரு தனிச்சிறப்பு என சொல்லப்படுகிறது. அருணகிரியாரால் பாடல்கள் பாடப்பட்ட முருகப்பெருமான் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.

இப்படி பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த தலத்தை ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

Exit mobile version