விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

0
140

விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கெளதமி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பாபநாசம் படத்திற்கு பின்னர் கெளதமி நடிக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், நந்தா, பிரசன்னா உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்க இருப்பதாகவும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் இருந்த கணியன் பூங்குன்றனார் என்றா டிடெக்டிவ் கேரக்டர்தான் இந்த படத்திலும் இருப்பதாகவும் இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கிய இன்னொரு திரைப்படமான சைக்கோ திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின், நித்யாமேனன், அதிதி ராவ் ஹைத்ரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தன்விர்மிர் ஒளிப்பதிவில் அருண்குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.