விஷால் பெற்ற 21.29 கோடி ரூபாய் கடன்! சொத்துக்களுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படம் தயாரிப்பிற்காக அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஷால் 21 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதற்கு அடுத்தபடியாக இந்த கடன் தொகை லைகா நிறுவனம், அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ்-க்கு கொடுத்தது. விஷால் மீண்டும் இப்பணத்தை லைக்கா நிறுவனத்திற்கு தரும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து பட உரிமைகளும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஆனால் ஒப்பந்தம் அடிப்படையில் விஷால் நடந்து கொள்ளாமல், வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழில் உள்ள பிற மொழிகளை வெளியிட முற்பட்டது. இதன் உரிமைகளை தடைவிதிக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்காத இருந்ததால் முன்னதாகவே திரைக்கு வந்துவிட்டது என கூறினர்.
இவ்வாறு இருக்கையில் விஷால் பெற்ற கடன் தொகை திருப்பி தராததால் லைக்கா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதில் விஷாலுக்கு இரண்டு வாரங்கள் நீதிமன்றம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த இரண்டு வாரத்திற்குள் விஷாலின் சொத்து விவரங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என கூறி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.