Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருக ஸ்ரீ மகா விஷ்ணு மந்திரம்!

ஓம் க்லீம் ஹரயே நமஹ
காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு உரிய மந்திரம் தான் இது இந்த மந்திரத்தை இல்லற வாழ்க்கையில் இருக்கும் ஆண்களும், பெண்களும், நாள்தோறும் காலையில் விஷ்ணு படத்திற்கு முன்பாக நின்று 27 முறை அல்லது 108 முறை சொல்வது நல்லது என்று சொல்லப்படுகிறது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு தம்பதிகளுடன் சென்று பெருமாளுக்கு பூக்கள் சமர்ப்பணம் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை தம்பதிகள் இருவரும் சேர்ந்து சொல்வதால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து என்றென்றும் இணைபிரியாமல் வாழும் அமைப்பு ஏற்படும் குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும் என்று சொல்லப்படுகிறது.

ஆதிசேஷன் மீது இருக்கும் யோக நித்திரையில் இருந்தபடியே உலகை காத்து கொண்டிருப்பவர் மகாவிஷ்ணு செல்வ மகளான லட்சுமி பத்தினியாக கொண்டவரும் அந்த லட்சுமியை தன்னுடைய இதயத்தில் வைத்திருப்பவரும் ஆகிய திருமால் அந்த மகாவிஷ்ணுவின் இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிறந்து வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வார்கள் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version