Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யுவனை விட மாட்டேன் – மீண்டும் இணையும் பில்லா கூட்டணி? விஷ்ணுவர்தன் அதிரடி!!

கோலிவுட் சினிமாவில் பட்டியல், சர்வம், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்க வில்லை முதன்முதலாக ஷெர்ஷா என்ற இந்தி படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த கேப்டன் விக்ரமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து என்ற ஷெர்ஷா பெயரில் திரைப்படமாக எடுக்கிறார்.

இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அத்வானி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் தல அஜித் நடிப்பில் வெளியான
பில்லா திரைப்படம் தான். இந்த படம் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் அஜித்தின் ஸ்டைல் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை அனைவரையும் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.

தற்போது மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் அஜித்-யுவனுடன் மீண்டும் இணைவீர்களா என்று கேட்டதற்கு இயக்குனர் விஷ்ணுவர்தன் கண்டிப்பாக நடக்கும் தமிழில் படம் இயக்கி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது கண்டிப்பாக தமிழில் படம் பண்ணுவேன் என் சகோதரர் யுவனை விட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Exit mobile version