Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த கட்சித்தலைவர் ஜே.பி. நட்டா முதலில் பேசினார். இந்த செயற்குழு கூட்டத்தின் ஒவ்வொரு அமர்விலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கட்சியின் தெலுங்கானா மாநில பொறுப்பாளர் தருண் சுக் தெரிவித்தார். பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தையொட்டி, அரங்குக்கு வெளியே கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோலாட்டக்கலைஞர்களுடன் நடிகை குஷ்புவும் இணைந்து ஆடியது அனைவரையும் வியப்பில் ஆழ்ந்தது.

செயற்குழு கூட்டத்தில் ஒரு அரசியல் தீர்மானமும் ஒரு பொருளாதார தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. என கட்சியின் தேசிய துணைத்தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா கூறினார். அரசியல் தீர்மானம் 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு முடிவடிகிறது. அதைத் தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். இதற்காக ஐதராபாத் நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் தலைவர்கள் வருகையையொட்டி இந்த நகரில் இதுவரை காணாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version