தை அமாவாசைக்கு முன்னோர்களை தரிசித்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும்!! ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்!
அம்மாவாசை என்றாலே முன்னோர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அம்மாவாசை அன்று வீடுகளை சுத்தம் செய்து நம் முன்னோர்களை வணங்கி ஆராதனை செய்து அவர்களுடைய பரிபூரணமான ஆசையை பெறக்கூடிய அற்புதமான நாள்.
அதிலும் சிறப்பாக கருதப்படுவது ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாட்களில் முக்கியமான வழிபாட்டு தலங்களான காசி, ராமேஸ்வரம், பவானி போன்ற இடங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் உணவுகள் படையல் இட்டும் வணங்கினால் அவர்களின் நல்லாசியை பெறலாம்.
இன்று தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் புனித நீராடி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். அதனால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் புனித தளங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே விரதமிருந்து பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி படையல் இட்டு முன்னோர்களை வணங்கினால் காசிக்குச் சென்று வழிபாடு செய்வதற்கு சமம் என்பது ஐதீகம்.