Vitamin B12 deficiency: வைட்டமின் B12 குறைபாடு காரணமாக விந்தணுக்கள் குறைய வாய்ப்புள்ளது.
ஆண்களுக்கு ஆண்மைத் தொடர்பான குறைபாடுகள் தற்போது அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய அவர்களின் வாழ்க்கை முறை காரணமாக அமைகிறது. தற்போது உள்ள இளைஞர்கள் மன அழுத்தம் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். உடல் உழைப்பு இல்லாத வேலையை செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவைகள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைய காரணமாக அமைகிறது. விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை பிரச்சனை மட்டும் இல்லாமல் ஆண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த குறைபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பது வைட்டமின் B12 என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த வைட்டமின் B12 குறைபாடு ஏற்படாமல் இருக்க சைவம் உண்பவர்கள் ஆப்பிள், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, அவுரிநெல்லி, கிவி பலன்களை நம் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவம் உண்பவர்கள் இறைச்சி, பால், முட்டை போன்ற புரதங்களை உண்ணலாம். ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்து செல்ல இது உதவுகிறது. இந்த குறைபாட்டின் அறிகுறியாக உடல் சோர்வு, மன அழுத்தம், ஞாபக மறதி போன்றவைகள் இருக்கும்.
தீவிரமான குறைபாடு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற சிக்கல்கள் ஏற்படும். வைட்டமின் B12 என்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாமல் உடல் ஆற்றலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. வைட்டமின் B12 குறைபாட்டின் அடுத்தபடியாக ரத்த சோகை நோய் ஏற்பட வழிவகுக்கிறது.