Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!!

#image_title

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!!

அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கரான விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகிறார். இதுபற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தேர்தல் பிரசாரத்தையும் டிரம்ப் தொடங்கி விட்டார்.

மேலும் அதே கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலேவும் அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அரசியலில் பயணத்தில் தனது சாதனைகள் குறித்து ஒரு காணொளியை வெளியிட்ட‍ அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவையும் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 37 வயதான விவேக் ராமசாமி ஒரு தொழிலதிபர்.

இவரது தந்தை எலக்ட்ரிக் இன்ஜினியர், தாயார் மனநல மருத்துவர். இவர்கள் இருவரும் கேரள மாநிலம் வடக்கன்சேரி பகுதியை சேர்ந்தவர்கள்.விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் பிறந்த இவர் தற்போது குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து அடுத்த அண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version