Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குக் வித் கோமாளி பிரபலம் பாலா பத்தாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் தெரியுமா? ருசிகர தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் தன்னுடைய நகைச்சுவை பேச்சால் எல்லோரையும் கலாய்த்து வந்த பாலா படிப்பிலும் படு சுட்டியாக இருந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 இல் பங்கேற்றுக் கொண்டவர் பாலா அவருடைய ஒல்லியான உடம்பு காரணமாக, எல்லோரும் கிண்டல் செய்யும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அதையே தன்னுடைய தனித்துவமாக மாற்றிக் காட்டியவர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு சில நாட்களிலேயே வெளியேற இருந்தவர் எப்படியோ தாக்குப்பிடித்து தன்னுடைய நகைச்சுவை பேச்சுக்களால் அந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகிவிட்டார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியின் பல ரியாலிட்டி ஷோக்கள் இவர் இல்லாமல் நடந்தது கிடையாது என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் செய்யும் நகைச்சுவை போன்றவற்றை இவரை எங்கிருந்து எடுக்கின்றார் என்று எல்லோரும் ஆச்சரியமாக உற்றுநோக்கி கொண்டிருப்பார்கள்.

அதன் பிறகு இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வருகை தந்தார். இரண்டு பகுதிகளுமே வெளியேறி அவர்களில் பாலாவுடன் இணைந்தவர்கள் ஆனால் அதையும் நகைச்சுவையாக மாற்றியது அவருடைய திறமையை காட்டுகிறது. அதோடு விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு பல நிகழ்ச்சிகளில் எல்லோரையும் கலாய்த்து தள்ளும் பாலா ஒரு சிறந்த படிப்பாளி என்று தெரிவிக்கப்படுகிறது. இது எல்லோரையும் ஆச்சரியத்திற்கு ஆளாகி இருக்கிறது. ஒரு ரியாலிட்டி ஷோவில் பாலாவை சிறப்பிக்கும் விதத்தில் அவருடைய குடும்பத்தினரையும் அழைத்து விஜய் தொலைக்காட்சியில் மரியாதை கொடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட பாலாவின் குடும்பத்தினர் பாலா பள்ளியில் நன்றாக படிப்பவர் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பாலா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தற்சமயம் வெளிவந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் பத்தாம் வகுப்பில் சுமார் 490 மதிப்பெண்கள் வாங்கி இருக்கின்றார். அதோடு அவர் படித்த பள்ளியின் இரண்டாம் இடமும் பிடித்து இருக்கின்றார். இதனை சிறப்பிக்கும் பொருட்டு அவருடைய பள்ளி நிர்வாகம் அப்போது பேனர் வைத்து இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விஷயம் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version