Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

VK Sasikall will redeem AIADMK?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர்.

அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே இருந்தார்.

MGR மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. உடைந்த கட்சியை மீண்டும் ஒன்றிணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

அரசியல் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் கண்டிருந்தாலும் ஜெயலலிதாவின் கடைசி 10 ஆண்டு கால ஆட்சி மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.

VK சசிகலா மன்னார்குடியை சேர்ந்தவர். ஜெயலலிதா இருக்கும் வரை மறைமுகமாக அரசியல் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவருடைய தோழி சசிகலா ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நேரடி அரசியலில் குதித்தார்.

ஆனால் கடந்த 2017 பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா 4 வருட சிறை தண்டனை முடித்து வெளியே வந்த நாளிலிருந்து தமிழக அரசியல் சூடு பிடித்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அமமுக கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய TTV தினகரன், திமுக உள்ளாட்சி தேர்தலில் ஊழல் செய்திருப்பதாக கூறினார், மேலும் எடப்பாடி பழனிசாமி அரசியலில் பலகீனமாக இருப்பதாக கூறினார்.

மேலும் பேசிய அவர் சசிகலா அதிமுக கட்சியை சசிகலா சட்ட ரீதியாக மீட்டெடுக்க போராடுவதாகவும், தான் தேர்தலில் வென்று ஜனநாயக ரீதியாக வெல்ல முயற்சிப்பதாகவும் கூறினார்.

சசிகலாவுக்கு ஆதரவான எழுச்சி இன்றும் அப்படியே இருப்பதாக கூறினார்.

 

 

 

 

 

Exit mobile version