திமுகவின் வெற்றி செல்லாது. அவர்களுடைய வெற்றி பொய்யாகும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிருத்தபட்டதை அடுத்து மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி சண்முகம் போட்டி இடுகிறார். ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை.
பொய் வாக்குறுதி பொய்யான அறிக்கை என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றியை திமுக பெற்றது. இந்த வெற்றி செல்லாது என்றும்,
அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். அவர் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
அதிமுக ஆட்சி தொடரும் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்
தடையில்லா மின்சாரம் தரப்படுவதால் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.
அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 16,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் திமுக பொய்யான அறிக்கை குடுத்து வெற்றி பெற்றதால் அவர்களது வெற்றி செல்லாது என்று கூறினார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.