Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இல்லம் தேடி கல்வித்திட்டம்! தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் வைத்த அமைச்சர்!

சென்னையை அடுத்த பரங்கிமலை, பட்ரோட்டு நசரத்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் உரையாற்றியபோது.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்வதன் நோக்கமாக இந்த இல்லம் தேடி கல்வித்திட்டம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். குழந்தைகளுக்கு எந்த ஒரு பட்டதாரியாக இருந்தாலும் பாடம் நடத்தலாம் என்ற விதத்தில் தன்னார்வலர்களை தேடி வருகின்றோம். தன்னார்வலர்கள் பலர் இந்த திட்டத்தில் சேர பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. சமுதாயத்திற்காக உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கிராமம் முதல் மாநகராட்சி பகுதிகளில் படித்த இளைஞர்கள் யாராக இருந்தாலும் தொண்டு செய்யும் உள்ளத்துடன் இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version