Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..வெளிப்படையாக கூறிய ரஜினி பட இயக்குனர்..!!

Vote for DMK India alliance..Rajini movie director openly said..!!

Vote for DMK India alliance..Rajini movie director openly said..!!

திமுக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..வெளிப்படையாக கூறிய ரஜினி பட இயக்குனர்..!!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் தாசெ ஞானவேல். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்த் ஞானவேல் செய்துள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி, ஞானவேல் அவரது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு அல்லாத சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கும் பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. 

இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் நமது சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்ற நம்பிக்கை அளிக்கின்றன. மேலும், நமது அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும் காத்துக்கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில், திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அடங்கிய இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த என்னையறிந்தவர்களிடம் கேட்டு கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

தற்போது ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தின் நடிகரான ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அப்படி உள்ள சூழலில் ஞானவேலின் இந்த பதிவை பார்த்து ரஜினிகாந்த் அதிருப்தி ஆவாரா? அல்லது சாதாரணமாக எடுத்து கொள்வாரா என்பது தெரியவில்லை. மற்றொருபுறம் ரசிகர்கள் அனைவரும் இவ்வளவு வெளிப்படையாக கூறியிருப்பதை பாராட்டி வருகிறார்கள்.

Exit mobile version