சேலத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் வாக்காளர்கள்!!

0
263
Voters are eagerly voting in Salem!!

சேலத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் வாக்காளர்கள்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தமிழகம் முழுவதும் இடைத்தேர்தல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சேலம் ஊராட்சி ஒன்றியம் எட்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆண்டிபட்டி மற்றும் வேடுகாத்தான்பட்டி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் தள்ளாடு வயதிலும் தடி ஊன்றி முதியோர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என 498 இடங்களும் நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர் நகராட்சி,பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 12 பதவிகள் காலியாக உள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. மாலை ஐந்து முதல் ஆறு மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வரும் வாக்களர்களுக்கு ஏற்றவகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

பின்னர் வாக்காளர்களுக்கு கையுறையும் வழங்கப்பட்டு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். முக்கியமாக  வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும்  முககவசம் கட்டாயம் அணிந்துவரும்படி கேட்டுக்கொள்ளபடுகிறது.  இதன் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் ஒவ்வொரு வாக்கு மையத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்காளர்களை கண்காணிக்கப்படுகிறது.

மேலும் அங்கு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போல் மின்னம்பள்ளி,பூவனூர்,நடுப்பட்டி, பொட்டனேரி,புல்லா கவுண்டம்பட்டி,தேவியாங்குறிச்சி கிழக்கு, ராசாபாளையம்,எலவம்பட்டி,நீர்மூழ்கி குட்டை ஆகிய  12 இடங்களில் முதலிலே  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.