விக்கிரவாண்டி தொகுதியில் விறு விறு வாக்குப்பதிவு!! மதிய 1 நிலவரப்படி 50.95 சதவீத ஓட்டுகள் பதிவு!!

0
208
Voting in Vikravandi Constituency is fast!! 50.95 percent votes registered as of 1 pm!!

விக்கிரவாண்டி தொகுதியில் விறு விறு வாக்குப்பதிவு!! மதிய 1 நிலவரப்படி 50.95 சதவீத ஓட்டுகள் பதிவு!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திரு புகழேந்தி அவர்கள் மறந்ததை தொடர்ந்து சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (10.07.2024)காலை 7 மணியிலிருந்து தொடர்ந்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.வாக்களர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு சென்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இதனால் விக்கிரவாண்டி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தேர்தலில் அதிமுக பங்கேற்கவில்லை,திமுக சார்பில் அன்னியூர் சிவா,பாஜக-வுடன் கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் அதுமட்டுமில்லாமல் பல சுயேட்ச்சை மற்றும் சிறு கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் களம் காண்கின்றனர்.

பாமக மற்றும் நாதக ஆகியோர் திமுக தான் தங்கள் பொது எதிரி என்றும் மேலும் அதிமுக தொண்டர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவு தர வேண்டுமென தொடர்ந்து,பிரச்சாரம் செய்து வந்தனர்.இந்த நிலையில் இன்று நடைபெறும் ஓட்டு பதிவின் முடிவினை வரும் ஜூலை 13-ஆம் அன்று தெரிந்து கொள்ளலாம்.மேலும் மும்னை போட்டியில் ஜெயிப்பது யார்?இதற்கான விடை ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

விக்கிரவாண்டியில் மொத்தம் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.மதியம் ஒரு மணி நிலவரப்படி 50.95 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.இந்த ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படும்,மேலும் இங்கு தான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.