Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேளச்சேரி விவகாரம்! விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த விசாரணை குழு!

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.

சென்ற செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் சென்னை தரமணி 100 அடி ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று சென்றது அதில் சென்ற மூன்று பேர் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றார்கள். இதனை பார்த்த எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். பின்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று நபர்களையும் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இரண்டு சக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது விதிமீறல் தான் என்று தெரிவித்திருக்கிறார். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், தேர்தல் ஆணையத்திற்கு விசாரணை குழு அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version